
நிறைந்தது இருள் என் மூடிய விழிக்குள்
வழிந்தது கண்ணீர் இமை இடுக்கில்
பெண்மை அங்கம் ஒன்று அகன்றபின்….அகன்றபின்….
விழி திறந்தபோதும் இருளேதான்
காணமுடியாதோ வாழ்வில் ஒளிதனை இனி? அரற்றியது என் வாய்
முட்டியது மூச்சு அச்சத்தின் அழுத்தத்தால்
“ஏன் முடியாது?” வீசும் தென்றல் வினவியது மெதுவாய்
“ பயிர் தழைக்க வரும் மழையாய்
உயிர் பிழைக்கச்செய்யும்
இன்னமுதாய்
தலைகோதும் தாயின் அன்பாய்
“சாயிஷா” இருக்க பயமேன்?”
“ ‘சாயிஷா’…? யாரது?” கடுத்தேன் தென்றலை
“ உன் மன இருளை அகற்றும் ஞாயிறு அன்றோ அது!”
“எப்படி?” ஆவல் தொனித்தது என் குரலில்
“ ‘நாக்கர்’ என்பதே அதன் ஒளிக்கதிர் -அது
கண்ணீரைக் காய வைக்கும்
புன்னகையை மலர்விக்கும்
அறிவாய் இதனை நீயே,
அணிவாய் ‘நாக்கர்’தனை விரைந்தே”
பணிந்தேன் தென்றலுக்கு
புகுந்தது என்னுள் நம்பிக்கை ஒளி! அகன்றது இருள்!
மீண்டது மூச்சு ,
வீசிய வசந்தத்
தென்றலால்!
நா. மோகனா தேவி
அடையார், சென்னை
28 பிங்க்டோபர், 2025